SELANGOR

குடியிருப்பாளர்கள் வாக்களிக்க போக்குவரத்து வசதி ஏற்பாடு -தஞ்சோங் சிப்பாட் தொகுதி

கோலா லங்காட், ஆகஸ்ட் 10: இந்த சனிக்கிழமை தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் வாக்களிக்க குடியிருப்பாளர்களை அழைத்து வர போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

மொத்தம் 14 வாக்குச் சாவடிகளில் தேவையான தளவாடத் தேவைகளைக் கண்டறிந்துள்ளதாகத் தஞ்சோங் சிப்பாட் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் போர்ஹான் அமன் கூறினார்

“நாள் முழுவதும் வாக்காளர்களைக் குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதற்கான சேவைக்காக மொத்தம் 120 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சக்கர நாற்காலி வசதியும் அளிக்கப்படும், ஏனெனில் அந்த வசதி தேவைப்படும் வாக்காளர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம்.

“அதுமட்டுமின்றி, மூச்சுத் திணறல் மற்றும் இதர சுகாதாரப் பிரச்சனைக்கு முதலுதவி அளிக்க தஞ்சோங் சிப்பாட்டில் ஆம்புலன்ஸ் வசதிகளும் வழங்கப்படுகின்றன,” என்று அவர் பந்தாய் பத்துவில் மலேசிய குழந்தைகள் தன்னார்வ அணிதிரட்டல் (சத்ரியா) நிகழ்ச்சியில் சந்தித்தபோது கூறினார்.

இதற்கிடையில், , மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் விளையாட்டு வசதிகளை அதிகரிப்பது தனது கவனத்தில் இருக்கும் ஒன்றாகும் என்று போர்ஹான் தெரிவித்தார்.

“குறிப்பாக இளைஞர்களுடனான சந்திப்புகள் மூலம், அவர்களில் பெரும்பாலோர் ஃபுட்சல், வலைப்பந்து, கூடைப்பந்து மற்றும் கடற்கரை கைப்பந்து போன்ற விளையாட்டுகளில் ஈடுப்படுவதற்கு மைதனங்களைக் கோரியுள்ளனர்.

“இனிமேல் தஞ்சோங் சிப்பாட்டில் உள்ள இளைஞர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகவும் பயனுள்ள வகையில் பொழுதுபோக்கைக் கழிப்பதை உறுதிசெய்ய நான் இதில் கவனம் செலுத்துவேன்,” என்று அவர் கூறினார்.

மாநிலத் தேர்தலில் அவர் பெரிகத்தான் நேஷனல் வேட்பாளர் சபிரின் மார்சோனோவுடன் போட்டியிடுகிறார்.


Pengarang :