NATIONAL

மாவட்டப் போலீஸ் தலைமையகம் முன் சினமூட்டும் செயல்- காவல் துறை உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், ஆக 12 – கிழக்குக் கரை மாநிலம் ஒன்றில் உள்ள மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் முன்பு சினமூட்டும் சம்பவம் ஒன்று நேற்று நிகழ்ந்ததைக் காவல்துறை உறுதிப்படுத்தியது.

மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் ஒரு நபர் பலரால் தாக்கப்படும் வீடியோ
காட்சியை போலீசார் விசாரித்து வருவதாக தேசியப் போலீஸ் படைத் துணைத்தலைவர்
டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இந்த சம்பவம் கிழக்கு கரை மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடந்தது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும். இதன் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது என்று அவர் சொன்னார்.

ஒருவேளை, இந்த சம்பவத்திற்ககுச் சினமூட்டும் நடவடிக்கை காரணமாக இருந்திருக்கலாம். இந்த சம்பவம் குறித்து மாநிலக் காவல்துறை தலைவர் செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என்று அவர் குறிப்பிட்டார்.

இன்று கிளாங் கேட் தேசியப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியை ஆய்வு செய்த
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

முதுகில் பாஸ் கொடி அலங்கரிக்கப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற
ஒருவரை மாவட்டக் காவல்துறை தலைமையகம் முன்பு பலர் தாக்குவதைக் காட்டும் 14 வினாடி வீடியோ காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.


Pengarang :