SELANGOR

உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் வெள்ளம் தணிப்பு திட்டமிடலில் கவனம் – பத்து திகா தொகுதி

 ஷா ஆலம், ஆகஸ்ட் 15: பத்து திகா தொகுதியின் பிரதிநிதி இப்பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு பிரச்சனைகள் மற்றும் வெள்ளம் தணிப்பு திட்டமிடலில் கவனம் செலுத்துவதில் உறுதியாக உள்ளார்.

ஷா ஆலம் மாநகராட்சியை சந்தித்து விரைவில் இந்த விஷயத்தைப் பற்றி விவாதிக்க திட்டமிட்டுள்ளார் .

“நான் ஒரு புதிய பிரதிநிதியாக இருந்தாலும், பெருநிறுவன, அரசியல் மற்றும் ஷா ஆலம் மாநகராட்சி கவுன்சிலர் என எனது 15 வருட அனுபவத்தை இந்த தொகுதியில் உள்ள சில பிரச்சனைகளைத் தீர்க்க பயன்படுத்துவேன்.

“இந்த குறுகிய காலத்திற்குப் பத்து திகா தொகுதி உள்கட்டமைப்பு பிரச்சினைகள் மற்றும் வெள்ளம் தணிப்பு திட்டமிடல் பற்றிய தகவல்களைப் பெற ஷா ஆலம் மாநகராட்சி தொடர்பு கொள்வேன்,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

அப்பகுதியை நிர்வகிப்பதற்கான ஆணையை மக்கள் வழங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை வீணடிக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளார்.

“நான் தலத்திற்குச் சென்று மக்களை அடிக்கடி சந்திப்பேன். ஏனென்றால் தலைமை என்பது மேலிருந்து தொடங்குவது மட்டுமல்ல, மக்களின் தேவைகளில் அக்கறை கொண்ட அணுகும் முறையிலிருந்து தொடங்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

அவர் 29,064 வாக்குகளைப் பெற்ற நிலையில் 3,382 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிட்ட பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டத்தோஸ்ரீ ரினா ஹருன் (25,682) மற்றும் மூடா வேட்பாளர் (1,908) சேடா ரசாக் ஆகியோர் தோல்வியை தழுவினர்.


Pengarang :