SELANGOR

வாகன இல்லாத் தினத்தை முன்னிட்டு சுவாரஸ்சியமான நடவடிக்கைகள் – உலு சிலாங்கூர் நகராண்மை

ஷா ஆலம், ஆகஸ்ட் 15: இந்த சனிக்கிழமை ஏற்பாடு செய்துள்ள வாகன இல்லாத் தினத்தை முன்னிட்டு உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் குழந்தைகளுக்கான பாடல் போட்டி மற்றும் தேசப்பற்று சம்பந்தப்பட்ட உடைகளை அணிதல் ஆகிய நிகழ்வுளைப் பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது.

பண்டார் குவாலா குபு பாருவில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சமையல் போட்டி (14 மாநிலங்களில்), குவாலா குபு பாருவின் வரலாற்றைக் கதை சொல்லுதல் மற்றும் பாத்தேக் தைத்தல் ஆகியவை அடங்கும்.

குழந்தைகளுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி, 3 கிமீ லீஷர்லி மெர்டேகா ஓட்டம், ஏரோபிக்ஸ், குதிரை வண்டிகள் மற்றும் முக ஓவியம் ஆகியவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

“மேலும், கலாச்சார நிகழ்ச்சிகள், அதிர்ஷ்ட குலுக்கல் மற்றும் ஏஜென்சி கண்காட்சிகளும் நடைபெறும்” என்று உள்ளூர் அதிகாரசபை முகநூல் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் முதல் 400 பார்வையாளர்களுக்கு டி-சர்ட் வழங்கியதாக உலு சிலாங்கூர் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.


Pengarang :