SELANGOR

முதலாவது மலேசியத் திட்டம் உள்ளிட்ட கொள்கைகளைப் புதிய அரசு நிர்வாகம் தொடரும்

ஷா ஆலம், ஆக 16- முதலாவது சிலாங்கூர் திட்டம் உள்ளிட்ட
முன்னெடுப்புகள் மற்றும் கொள்கைகளை புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும்
அரசு நிர்வாகம் தொடரும்

அதே சமயம் தேர்தல் சமயத்தில் வழங்கப்பட்ட 5 வாக்குறுதிகளை 100
நாட்களுக்குள் நிறைவேற்றுவதிலும் மாநில அரசு முனைப்பு காட்டும்
என்று பாண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினரான இஷாம் ஹஷிம்
கூறினார்.

மக்களுக்குப் பயன்தரக்கூடிய கொள்கைகள் தொடரப்படும். அதேசமயம்
புதிய முன்னெடுப்புகளும் கொள்கைகளும் அறிமுகப்படுத்தப்படும் என
அவர் தெரிவித்தார்.

முதலாவது சிலாங்கூர் திட்டம் மற்றும் கித்தா சிலாங்கூர் வாக்குறுதிகளை
நாம் கொண்டிருக்கிறோம். இவை பிற்காலத்தில் நமது
செயலாக்கத்திற்கான அடித்தளமாக விளங்கும் என்றார் அவர்.

இதனிடையே, கடந்த வாரம் நடைபெற்றத் தேர்தலில குறைந்த வாக்குகள்
வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய தொகுதிகள் தொடர்பான
விரிவான ஆய்வினை சிலாங்கூர் மாநில அமானா ராக்யாட் கட்சி
மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

வாக்களித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தது உள்ளிட்ட பல
அம்சங்கள் இதற்கு காரணமாக உள்ளன. வாக்களிப்போர் எண்ணிக்கை
குறைந்தது பொதுத் தேர்தலின் போது அல்லாமல் மாநிலத் தேர்தலின்
போது மட்டுமே நிகழ்ந்துள்ளது. இது குறித்தும் இதர காரணங்கள்
குறித்தும் நாங்கள் விரிவாக ஆராய்வோம் என்றார் அவர்.


Pengarang :