SELANGOR

குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் குப்பை நிர்வகிப்பு மேம்படுத்தப்படும்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: கோலா லங்காட் தேசிய இளைஞர் திறன் நிறுவனத்திற்கு (IKBNKL) குப்பைத் தொட்டிகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் KDEB கழிவு மேலாண்மை (KDEBWM)  அதன் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தைத் தொடர்கிறது.

நேற்று, 660 லிட்டர் எளிதாக நகரத்தக்கூடிய குப்பைத் தொட்டிகளின் (எம்ஜிபி) ஐந்து அலகுகளை கோலா லங்காட் KDEB கழிவு மேலாண்மை, வழங்கியது என மாநிலத்தின் திடக்கழிவு கையாளுதல் மற்றும் பொது துப்புரவு நிறுவனம் தெரிவித்தது.

“இந்தத் தொட்டியின் நன்கொடை IKBNKL ஐச் சுற்றியுள்ள வீட்டுக் கழிவுகளை அகற்றும் நிர்வகிப்பை மேம்படுத்தும் என்று நம்புகிறேன்.

 “மேலும், பொதுமக்களும் குப்பைகளைக் குறிப்பிட்ட இடங்களில் வீசுவார்கள் என்றும் நம்புவதாக அவர் ட்விட்டரில் தெரிவித்தார்.


இந்த நன்கொடையை KDEBWM இன் செயல்பாட்டுத் தலைவர் அட்ஸ்மி இடாம் அப்துட் ஹலிம் அவர்கள் IKBNL இயக்குநர் டாக்டர் புத்தே மெலோர் வெஸ்மா சலேஹான் அவர்களிடம் வழங்கினார்.


Pengarang :