SELANGOR

கண்ணாடி வீடு கட்டுதல் மற்றும் நகர்ப்புற வேளாண்மை திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு – பிபிஏஎஸ்

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) ஏற்பாடு செய்துள்ள கண்ணாடி வீடு கட்டுதல் மற்றும் நகர்ப்புற வேளாண்மை திட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆறு முதல் ஒன்பது வயதுடைய மாணவர்கள் RM4 என்ற குறைந்த கட்டணத்துடன் கூடிய இத்திட்டத்தில் கலந்து கொண்டு பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று மேம்பாடு மற்றும் பராமரிப்புப் பிரிவு நூலகர் நோரெல்மின் சபுவான் கூறினார்.

“இந்த திட்டத்தின் மூலம் நாங்கள் அவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கவுள்ளோம், “ என்றார்.

“மேலும், இந்த நடவடிக்கை நூலகத்திற்குச் சிறுவர்களின் ஆர்வத்தை ஈர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பள்ளி விடுமுறை நாட்களில் குறிப்பாக மாணவர்களை நூலகத்திற்குச் செல்வதற்கான ஆர்வத்தை தூண்டுவதற்காக பிபிஏஎஸ் எப்போதும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதாக நோரெல்மின் கூறினார்.


Pengarang :