SELANGOR

சிலாங்கூர் சாத்தே கண்காட்சியில் 100,000 சாத்தே வழங்கப்படும் – சிப்பாங்

ஷா ஆலம், செப் 5: 100,000 சாத்தேவை வழங்கும் சிலாங்கூர் சாத்தே கண்காட்சி, செப்டம்பர் 16 அன்று சிப்பாங்கில் உள்ள பாகன் லாலாங் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற திட்டமிடப்பட்ட இந்த நிகழ்ச்சியானது, குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாத்தே உணவை வணிகமயமாக்குவதற்கான மாநில அரசின் திட்டங்களில் ஒன்றாகும் என்று கலாச்சார துறை பொறுப்பு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

சாத்தே பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். உள்ளூர் சமூகம் அதை அறிந்திருக்கலாம். ஆனால் சிலாங்கூர் அல்லது மலேசியாவிற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை” என்று போர்ஹான் அமன் ஷா சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

கடந்த நவம்பரில் மலேசிய சாதனை புத்தகத்தில் (MBOR) இடம்பெற்ற மலேசியாவில் நடந்த மிகப்பெரிய அம்பெங் ரைஸ் கண்காட்சி போல் இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.


Pengarang :