NATIONAL

ஆசியப் போட்டியில் ஷா ஃபிர்டாவுஸ், சிவசங்கரி தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்

கோலாலம்பூர், செப் 7- இம்மாதம் 23 முதல்
அக்டோபர் 8 வரை சீனாவில்
நடைபெறவுள்ள ஹாங்சோ ஆசிய
விளையாட்டுப் போட்டியில் தேசியக்
குழுவிற்கான கொடியை ஏந்திச் செல்லும்
வாய்ப்பு தட சைக்கிளோட்ட வீரரான முகமது
ஷா ஃபிர்டாவுஸ் சஹ்ரோம் மற்றும் ஸ்குவாஷ்
சாம்பியன் எஸ். சிவசங்கரி ஆகியோருக்கு
வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இங்கு நடைபெற்ற விளையாட்டு
வீரர்களுக்கும்

அதிகாரிகளுக்கும் தேர்வு கடிதங்களை
வழங்கும் விழாவில் மலேசிய ஒலிம்பிக்
மன்றத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமது
நோர்சா ஜக்காரியா இதனைத் அறிவித்தார்.

ஷா ஃபிர்டாவுஸ் மற்றும் சிவசங்கரி இருவரும்
உயரிய நற்பெயரைக் கொண்டுள்ளதோடு
ஹாங்சோ போட்டிகளில் பதக்கம் பெறும்
வாய்ப்புள்ளவர்களாகவும்
காணப்படுகிறார்கள். அவர்கள் மற்ற
விளையாட்டு வீரர்களுக்கு குறிப்பாக இந்த
முக்கிய நிகழ்வில் அறிமுகமாகும் வீரர்களுக்கு
ஊக்கமளிப்பார்கள் என்று நம்புகிறேன்
என்றார் அவர்.

கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த்
விளையாட்டுப் போட்டிகளில் தேசியக்
கொடியை ஏந்திச் செல்ல சிவசங்கரியும்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால்

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் சாலை
விபத்தில் சிக்கியதால் அதில் பங்கேற்க
முடியவில்லை.

சமீபத்திய பட்டியலின் அடிப்படையில் இந்த
ஆசிய விளையாட்டில் 289 விளையாட்டு
வீரர்கள் மற்றும் 145 அதிகாரிகள்
மலேசியாவைப் பிரதிநிதிப்பார்கள் என
அறிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :