SELANGOR

பின்னோக்கி வந்த கார் மோதியதில் சிறுமி காயமடைந்தார்

ஷா ஆலம், செப்.7: பண்டார் புஞ்சாக் ஆலம், ஜாலான் எக்கோ கிராண்டியூர் 1/8 என்ற இடத்தில் உள்ள கடையின் நடைபாதையில், பின் புறமாக வேகமாக வந்த கார் ஒன்று, சிறுமியை மோதிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய வருகிறது. அச்சிறுமி சிறு காயங்களுக்கு ஆளானது நேற்று உறுதி செய்யப்பட்டது. .

மாலை 6.40 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால் சிறுமியின் முகத்தில் கீறல்கள் ஏற்பட்டதாகக் கோலா சிலாங்கூர் மாவட்ட துணைக் காவல்துறைத் தலைவர் டிஎஸ்பி முகமட் அம்பியா நோர்டின் தெரிவித்தார்.

“சிறுமி அல்-சுல்தான் அப்துல்லா மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் இரவு 8.30 மணியளவில், அவர் நலமாக இருப்பதை உறுதிசெய்து மருத்துவமனையை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார்,” என்று முகமட் அம்பியா அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“வாகனம் நிறுத்துமிடத்திற்குள் நுழைய ஓட்டுனர் திடீரென எரிவாயு மிதிவை அழுத்தியதால், அதிவேகத்தில் கார் பின்னோக்கிச் சென்றதாக நம்பப்படுகிறது.

“அப்போது அந்த பகுதியில் உள்ள நடைபாதையிலும் கடை வளாகத்தின் முன் உள்ள கதவுகளிலும் கார் மோதியது,” என்று அவர் கூறினார். மேலும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 43 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

 

– பெர்னாமா


Pengarang :