NATIONAL

கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் ஏர் கார்கோ வளாகத்தில் போதைப்பொருள் பறிமுதல்

நீலாய், செப்டம்பர் 7 – ஆகஸ்ட் 29 அன்று சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச
விமான நிலையத்தில் ஏர் கார்கோ வளாகத்தில் 32 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 436.2
கிலோகிராம் மெத்திலினெடியோக்சிமெதம்பேட்டமைன் (எம்டிஎம்ஏ) மற்றும் எக்ஸ்டஸி
மாத்திரைகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சுங்கத்துறை கைப்பற்றிய 36 பெட்டிகளில் 12 வகையான எக்ஸ்டஸி மாத்திரைகள்
இருந்தன என சுங்கத்துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ சாசுலி ஜோஹன் கூறினார்.
மீதமுள்ள பெட்டிகள் செங்கற்களால் நிரப்பப்பட்டிருந்தன.

அவை ஐரோப்பிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சரக்கு என ஆரம்ப
விசாரணையில் கண்டறியப் பட்டதாகக் கம்போங் ஜிஜானில் உள்ள சுங்கத் துறை
செய்தியாளர் சந்திப்பின் போது கூறியது.

இந்த ஆண்டு இதுவரை பதிவு செய்யப்பட்ட ஐந்து வழக்குகளில் இது மிகப்பெரியது
என்றும், ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B(1)(a) இன் கீழ் இந்த வழக்கு
விசாரிக்கப்படும் என்றும் சாசுலி கூறினார்.

– பெர்னாமா


Pengarang :