SELANGOR

மெகா சாலை மேம்பாடு திட்டம் உலு லங்காட் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் தொடரும்

ஷா ஆலம், செப்டம்பர் 7: கடந்த மே மாதம் முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் மெகா சாலை மேம்பாடு திட்டத்தை உலு லங்காட் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களில் இன்ஃப்ராசெல் தொடர்கிறது.

நேற்றிரவு உலு லங்காட் மாவட்டத்தில், ஜாலான் ப்ரோகா, செமினியில் சாலை பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப் பட்டதாக மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலு சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள ஜாலான் எஸ்டெட் சுங்கை காபியில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி சாலை சீரமைப்பு பணி நிறைவடைந்தது.

இன்ஃப்ராசெல் முன்பு கோலா லங்காட், சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், கிள்ளான், உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் மாவட்டங்களில் பல சாலை மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல் படுத்தியது.

ஆகஸ்ட் 22 அன்று, மாநிலம் முழுவதும் 93 பெரிய அளவிலான சாலை மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது 86 சதவீதத்தை எட்டியுள்ளதாக இன்ஃப்ராசெல் ஆபரேஷன்ஸ் எக்ஸிகியூட்டிவ் அப்துல்லா ஹனிஃப் அப்துல் காலிப் அறிவித்தார்.

பொது மக்களின் புகார்களை கருத்தில் கொண்டு 50 மில்லியன் ரிங்கிட் செலவில் மெகா சாலை மேம்பாடு திட்டத்தின் மூலம் சாலை சீரமைப்பு பணிகள் இம்மாதம் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

மாநிலத்தின் சாலைகள் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக RM50 மில்லியன் நிதியுடன் ஒரு பெரிய அளவிலான திட்டத்தை டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக அறிவித்தார்


Pengarang :