SELANGOR

குடும்பம் சமுதாயத்தின் வேர் என்ற கருப்பொருளில் சிலாங்கூர் மாநிலக் குடும்பக் கருத்தரங்கு

ஷா ஆலம், செப் 17: செப் 21 அன்று பாங்கி ரிசார்ட் ஹோட்டலில் குடும்பம்
சமுதாயத்தின் வேர் என்ற கருப்பொருளில் சிலாங்கூர் மாநிலக் குடும்பக் கருத்தரங்கு
ஒன்றை வனிதா பெர்டாயா சிலாங்கூர் (WBS) இலவசமாக ஏற்பாடு செய்துள்ளது.

குடும்ப அமைப்பை மேம்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல் பற்றிய கருத்துகளை
விவாதிக்கும் இக்கருத்தரங்கில் அரசு நிறுவனங்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள்,
அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று வனிதா பெர்டாயா
சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

"இந்நிகழ்வில் வழங்கப்பட்ட இடங்கள் குறைவாகவே உள்ளன. அதனால்,
ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக https://bit.ly/SeminarKeluargaSelangor2023 என்ற
இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன்
செய்யலா என்று முகநூலில் வனிதா பெர்டாயா சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

இக்கருத்தரங்கில் விவாதிக்கப்படும் கருத்துகள் சிலாங்கூரில் உள்ள குடும்பங்களின் நலன் மற்றும் நல்வாழ்வுக்காகப் பயனுள்ள திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளைத்
திட்டமிடுவதற்காக மாநில அரசுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் மேலும்
கூறியது.

இக்கருத்தரங்கில் சமூக-பொருளாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு தொடர்பான
கட்டுரைகள் படைக்கப்படும். மேலும் சமூகத்தின் பொருளாதாரம் பற்றிய விவாதம்
மற்றும் குழு முறையில் கருத்துரையாடல் நடத்தப்படும்; என்று அறிவிக்கப்பட்டது.

கருத்தரங்கில் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர்
ஐமான் அதிரா சாபு சிறப்புரையாற்ற உள்ளார்.


Pengarang :