SELANGOR

சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வணிக மூலதனமாக RM5,000 வழங்கப்படும் – யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர்

ஷா ஆலம், செப் 27: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் சிறு தொழில் தொடங்க விரும்புவோருக்கு வணிக மூலதனமாக RM5,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

டாருல் எஹ்சான் வணிக நிதித் திட்டம் (நாடி) மூலம் இந்த உதவி வழங்கப்படுகிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்தத் திட்டம் சிலாங்கூர் மக்களுக்குக் குறிப்பாக மிகவும் ஏழ்மையான நிதி நிலைமையைக் கொண்ட குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண்களுக்குத் திறந்திருக்கும்.

“இந்த திட்டம் அனைத்து வணிகத் துறைகளுக்கும் திறந்திருக்கும், மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com ஐப் பார்வையிடலாம் அல்லது அருகிலுள்ள 19 ஹிஜ்ரா சிலாங்கூர் கிளைகளைத் தொடர்பு கொள்ளலாம்” என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் மலேசியராக இருக்க வேண்டும், 18 முதல் 65 வயது உடையவர்களாக இருத்தல் வேண்டும், மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக இயங்க வேண்டும் மற்றும் கடன் வாங்கியவர் குடும்பத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும்.

http://mikrokredit.selangor.gov.my/ என்ற இணைப்பின் மூலம் இணையத்தின் வழி விண்ணப்பிக்கலாம்.சிலாங்கூர் பட்ஜெட் 2023யில் ஹிஜ்ரா சிலாங்கூர் திட்டத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோர் வளர்ச்சிக்கு உதவவும் RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டது.


Pengarang :