NATIONAL

சிறு விவசாயிகள் மறு நடவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க நிதி தேவை

கோலாலம்பூர், அக்டோபர் 3 – செம்பனை தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகளின் மறு நடவு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க உதவும் நிதி ஆதாரங்களுக்கான பெருந்தோட்ட அமைச்சகம்  அதன் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் தெரிவித்தார்.

அவை இப்போது நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகத் துணைப் பிரதமராகவும் இருக்கும் ஃபாடில்லா கூறினார்.

“பட்ஜெட் அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும். நாங்கள் குறிப்பாகச் சிறு   தோட்ட விவசாயிகளுக்கு, மறு நடவு செய்வதற்கு தேவைப்படும் செலவு குறித்து  ஏலம்  கோரியுள்ளோம்.

“அதே நேரத்தில், விவசாயத் துறையில் வணிகம் செய்வதற்கான செலவு அதிகரித்து வருவதால், பெரிய நிறுவனங்கள் மறு நடவு செய்வதற்கு முன் முயற்சிகள் (கூட) பற்றி நாங்கள் பேசுவோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

உலக சந்தையில் நிலைத்தன்மையை மட்டுமின்றி போட்டித்தன்மையையும் உறுதி செய்ய தொழில்துறை முனைவோர்களுக்கு உதவுவதற்கான வழிகளை அமைச்சகம் ஆராய்ந்து வருவதாக ஃபாடில்லா கூறினார்.

– பெர்னாமா


Pengarang :