NATIONAL

சிலாங்கூரில் மூன்று பகுதிகளில் ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன

ஷா ஆலம், அக் 3: சிலாங்கூரில் மூன்று பகுதிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகள் பதிவாகியுள்ளன.

அவ்விடங்கள் பந்திங் (125) பெட்டாலிங் ஜெயா (99) மற்றும் ஷா ஆலம் (116) ஆகும் என மலேசியன் காற்று மாசுபாடு குறியீட்டு மேலாண்மை அமைப்பு (APIMS) தெரிவித்துள்ளது.

மேலும், ஆரோக்கியமற்ற காற்று மாசுக் குறியீடு (API) அளவீடுகளை செரஸ் (155), கோலாலம்பூர் (155), நீலாய் (157); சிரம்பான் (149) மற்றும் போர்ட் டிக்சன், நெகிரி செம்பிலான் (101). ஆகிய இடங்களும் பதிவு செய்துள்ளன.

இருப்பினும், இன்று காலை 10 மணி வரை, ஜோஹான் செத்தியா (89) மற்றும் கிள்ளான் (93) மிதமான அளவீடுகளைப் பதிவு செய்துள்ளது.

0 முதல் 50 வரையிலான IPU அளவீடுகள் நல்லது, 51 முதல் 100 மிதமானது, 101 முதல் 200 ஆரோக்கியமற்றது, 201 முதல் 300 மிகவும் ஆரோக்கியமற்றது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் 300 மற்றும் அதற்கு மேற்பட்டவை ஆபத்தானவை ஆகும்.

சமீபத்திய காற்று மாசுக் குறியீட்டின் (API) அளவீட்டின் நிலையை அறிய மக்கள் APIMS இணையதளத்தைப் பார்வையிடலாம்.

கடந்த மே மாதம், வானிலை மற்றும் காலநிலை அதிகாரிகள், இந்த ஆண்டு ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் தெற்கு ஆசியான் பிராந்தியத்தில் மிகவும் கடுமையான முகை மூட்டம் நிகழும் என எச்சரித்தனர்.


Pengarang :