NATIONAL

ஐ.பி.யு. அளவு 200ஐ தாண்டினால் பள்ளிகள் மூடப்படும்- செயற்கை மழைக்கான முயற்சி முன்னெடுக்கப்படும்

கோலாலம்பூர், அக் 3- புகைமூட்டப் பேரிடரை எதிர்கொள்வதற்கான
நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கு ஏதுவாக தேசியப் புகை மூட்ட
நடவடிக்கை மேம்பாட்டு செயல் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று
மலேசிய சுற்றுசூழல் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ வான்
லத்திப் வான் ஜாபர் கூறினார்.

காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) 24 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக
150க்கும் மேல் பதிவாகும் பட்சத்தில் நட்மா எனப்படும் தேசியப் பேரிடர்
மேலாண்மை நிறுவனம் மாவட்ட, மாநில மற்றும் தேசிய நிலையில்
பேரிடர் மேலாண்மை செயல்குழுக்களை தயார் நிலையில் வைப்பதும்
அந்த நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

மேலும் ஐ.பி.யு. அளவு 100க்கும் மேல் பதிவானானல் அனைத்து
பள்ளிகளிலும் புறப்பாட நடவடிக்கைகள் நிறுத்தப்படும். ஐ.பி.யு. அளவு
200ஐத் தாண்டும் பட்சத்தில் பாலர் மற்றும் மழலையர் பள்ளிகள்
உடனடியாக மூடப்படும். இதன் அடிப்படையில் அனைத்து பள்ளிகள்,
பாலர் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் ஐ.பி.யு. பதிவுகளை
தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இருபத்து நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஐ.பி.யு. அளவு தொடர்ந்து
150க்கும் மேல் பதிவாகும் பட்சத்தில் வானிலை மற்றும் வானில்
காணப்படும் மேகங்களின் அளவின் அடிப்படையில் செயற்கை மழையைப்
பெய்விப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

நேற்று மாலை 6.00 மணி நிலவரப்படி ஒரு இடத்தில் காற்றின் தரம்
ஆரோக்கியமானதாகவும் 56 இடங்களில் மிதமானதாகவும் பதிவானதாக
அவர் தெர்வித்தார்.


Pengarang :