‘சித்தம்’ ஏற்பாட்டிலான டிக் டாக் பயிற்சியில் 30 இந்திய தொழில் முனைவோர் பங்கேற்பு

ஷா ஆலம், அக் 5- யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தின்
ஆதரவுடன் சிலாங்கூர் இந்திய தொழில் ஆர்வலர் மையம் (சித்தம்)ஏற்பாடு செய்துள்ள  டிக் டாக் சூப்பர் வியூகப் பயிற்சித் திட்டத்தில் 30 பேர் பங்கு கொண்டுள்ளனர்.

இவ்வாண்டிற்கான இந்த இரண்டாம் கட்டப் பயிற்சி  நேற்று தொடங்கி இரு தினங்களுக்கு கோலக் கிள்ளான் கிறிஸ்டல் கிரவுன் ஹோட்டலில் நடைபெறுகிறது.

இந்திய தொழில் முனைவோரை இலக்காகக் கொண்ட பயிற்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படுவதோடு
பங்கேற்பாளர்களுக்குத் தங்குமிட வசதியும் உணவும் இலவசமாக ஏற்பாடு செய்து தரப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு நாள் பயிற்சியில் டிக் டாக் என்றால் என்ன? வர்த்தகத்தில் அந்த செயலியின் பயன்பாடு, பொருள்களை விளம்பரப்படுத்தும் முறை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பயிற்சி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

பலரும் டிக் டாக்கில் தங்கள் வர்த்தகத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால், அதனை எவ்வாறு முறையாகச் செய்வது என்று பலருக்குத் தெரிவதில்லை. தங்கள் விற்பனைப் பொருள்களைக் காட்சிப்படுத்துவது, வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் வாசகங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்கள் இந்தப் பயிற்சியில் கற்றுத் தரப்படுகிறது.

இந்த பயிற்சியில் தற்போது வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படுகிறது. வர்த்தகத்தில் ஈடுபட ஆர்வம்
உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாண்டிற்கான முதல் கட்டப் பயிற்சி கடந்த செப்டம்பர் 6 மற்றும்
7ஆம் தேதிகளில் காஜாங் ஆர்.எச்.ஆர். தங்கும் விடுதியில் நடைபெற்ற வேளையில் மூன்றாம் கட்டப் பயிற்சி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது என்று அவர் தெயிவித்தார்.

அதோடு மட்டுமின்றி, பங்கேற்பாளர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் பயிற்சி தமிழில் நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியை முடித்தவர்கள் தங்கள் வர்த்தகத்தை சமூக ஊடகங்கள் வாயிலாகச் சந்தைப்படுத்துவதற்குரிய ஆற்றலைப் பெற்றிருப்பர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த பயிற்சியின் நிறைவு விழாவில் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி மற்றும் செந்தோசா சட்டமற்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஆகியோர் கலந்து பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குவர் என்று கென்னத் மேலும் சொன்னார்.


Pengarang :