NATIONAL

மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக 280 கோடி  ரிங்கிட் ஒதுக்கீடு

கோலாலம்பூர், அக் 13 – மத்திய சாலை மற்றும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக அரசாங்கம் அடுத்த ஆண்டு 280 கோடி  ரிங்கிட் ஒதுக்கியுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், இந்த ஒதுக்கீட்டில் ஜி1 முதல் ஜி4 வரையிலான சிறு குத்தகையார்களுக்கு ரிம 300 மில்லியன் அடங்கும் என்றார். மேலும், 115 மாவட்ட பொறியாளர்களின் சேவைகள் RM200,000 ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும்.

“அதுமட்டுமில்லாமல், தெரு விளக்குகளை பராமரிக்க RM100 மில்லியன் ஒதுக்கப்படும். மின்சாரத்தில் 60 சதவீதம் வரை சேமிக்க கூடிய ஆற்றல் திறன் கொண்ட எல்இடி விளக்குகளுக்கு மாற்றுவது உட்பட நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பகுதிகளில் இதே நோக்கத்திற்காக RM50 மில்லியன் வழங்கப்படுகிறது.

இன்று டேவான் ராக்யாட்டில் மலேசியா மடாணி பட்ஜெட் 2024 ஐ தாக்கல் செய்யும் போது, “பெடரல் சாலைகளில் இருக்கும் போக்குவரத்து விளக்குகளை ஸ்மார்ட் டிராபிக் விளக்குகளாக மேம்படுத்துவது உட்பட விபத்து ஏற்படும் பகுதிகளை மேம்படுத்த 50 மில்லியன் ரிங்கிட் செலவிடப்படும்,” என்று அவர் கூறினார்.

மாநில சாலைகள் மக்களின் நலனுக்காகச் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, மத்திய அரசால் செயல்படுத்தப் பட்ட மலேசியச் சாலை பதிவு தகவல் அமைப்பு (மாரிஸ்)க்கான RM5.4 பில்லியன் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அன்வார் மேலும் கூறினார்.

சாலை பாதுகாப்பு என்பது அரசின் முன்னுரிமையாக தொடரும் என்று கூறிய அவர், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை குழிகள் நிறைந்த 4,100 ஃபெடரல் சாலைகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப் பட்டுள்ளன.

அதுமட்டுமல்லாமல், 8,354 பள்ளிகளில் கழிப்பறை பழுதுபார்க்கும் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு நாடு முழுவதும் 150 பொதுக் கழிப்பறைகளை சரிசெய்ய RM150 மில்லியன் ஒதுக்கப்படும்.

– பெர்னாமா


Pengarang :