NATIONAL

ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் வெகுமதிகளை ஆய்வு செய்ய தனியார் துறைக்கு  அரசாங்கம் பரிந்துரை

கோலாலம்பூர், அக் 13: தற்போதைய வாழ்க்கைச் செலவு சவால்களைக் கருத்தில் கொண்டு, ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் வெகுமதிகளின் சரியான தன்மையை ஆய்வு செய்ய நாட்டிலுள்ள தனியார் துறையை அரசாங்கம் ஊக்குவிக்கிறது.

அடுத்த ஆண்டு  அதற்கான பணியை  அரசாங்கம் தீவிரப்படுத்த உள்ளதாக நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

இன்று டேவான் ராக்யாட்டில் ‘பொருளாதார சீர்திருத்தம், மக்களுக்கு பங்களித்தல்’ என்ற கருப்பொருளுடன் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, “தனியார் துறையை குறிப்பாக நியாயமான லாபம் ஈட்டும் நிறுவனங்கள்  தக்க  வெகுமதி அளிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :