SELANGOR

சோதனை நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் 12 கடைகள் மூடப்பட்டன

ஷா ஆலம், அக் 16: நேற்று பண்டமாரான், புக்கிட் திங்கி மற்றும் மேரு ஆகிய இடங்களில் கிள்ளான் மாநகராட்சி நடத்திய தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்களால் நடத்தப்படும் குறைந்தது 12 கடைகள் மூடப்பட்டன.

வெளிநாட்டவர்கள் உணவு, காய்கறிகள், பழங்கள் மற்றும் சிகரெட்டுகளை விற்கும் கடைகளை நடத்தி வருகின்றனர் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

“பாண்டமாரானில் நடந்த நடவடிக்கையில் ஜாலான் செலம்பிட் தாமான் கிள்ளான் ஜெயாவில் காலை சந்தை, ஜாலான் பாப்பானில் காலை சந்தை மற்றும் ஜாலான் தெங்கு கிளானா ஆகிய மூன்று இடங்களில் வெளிநாட்டினரால் நடத்தப்படும் இரண்டு வணிகங்கள் மூடப்பட்டன .

“தாமான் கிள்ளான் ஜெயா, புக்கிட் திங்கி இரவு சந்தையில் மேலும் மூன்று பறிமுதல்கள் மற்றும் மேருவில் ஜாலான் தெருந்தோம் மற்றும் லோரோங் திங்காட் இரவு சந்தைகளில் ஆறு பறிமுதல் கள் மேற்கொள்ளப்பட்டன” என்று அவர் முகநூலில் கூறினார்.

வணிகர்கள் (எம்பிகே) 2007 இன்  விதி துணை பிரிவு  (UUK) 3 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, மேருவில் உள்ள ஓர் உள்ளூர் வணிகருக்கு உரிமம் இல்லாதக் காரணத்தால் எம்பிகே அபராதம் வழங்கியது.

வணிகர்கள் தங்கள் உரிமத்தை புதுப்பிக்கவும், ஆண்டு இறுதிக்குள் அனுமதி கட்டணத்தை செலுத்தவும் ஒரு வாய்மொழி எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.


வழங்கப் பட்டுள்ள இடத்தை தாண்டி, கடைகளைத் திறக்க வேண்டாம் எனவும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


Pengarang :