SELANGOR

அனுமதியின்றி வாகன நிறுத்துமிடங்களில் சாயம் பூசும் வர்த்தகர்கள் அல்லது வளாக உரிமையாளர்களின் வணிக உரிமம் ரத்து – எம்பிபிஜே

பெட்டாலிங் ஜெயா, அக் 27: அனுமதியின்றி வாகன நிறுத்துமிடங்களில் சாயம் பூசும் வர்த்தகர்கள் அல்லது வளாக உரிமையாளர்களின் வணிக உரிமத்தைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) ரத்து செய்யும்.

வாகன நிறுத்துமிடங்களில் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் அஸ்னான் ஹாசன் கூறினார்.

“பெட்டாலிங் ஜெயாவைச் சுற்றியுள்ள வணிக வளாகங்களில் சட்டப்பூர்வ வாகன நிறுத்தும் இடம் தொடர்பான பதிவுகள் எம்பிபிஜேயிடம் உள்ளது.

“எனவே, வணிக வளாகத்தின் அனைத்து உரிமையாளர்களும், அவர்களுக்கென ஒரு சிறப்பு சட்டப்பூர்வ வாகன நிறுத்துமிடம் இருந்தாலும் அல்லது வேறு ஏதேனும் இருந்தாலும், அவ்விடத்திற்குச் சாயம் பூச வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

“வாகன நிறுத்தும் இடத்தைத் தவறாகப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், வணிக உரிமத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படலாம்,” என்று அவர் இன்று முழு எம்பிபிஜே கூட்டத்திற்குப் பிறகு சந்தித்தபோது கூறினார்.

உரிமம் ரத்து செய்யப் படுவதைத் தவிர்க்க, வணிகர்கள் விதிகளுக்கு இணங்குமாறும், அந்தந்த வணிக வளாகத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அஸ்னான் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, அனுமதியின்றி சிறப்பு வாகன நிறுத்திடத்தில் சாயம் பூசியதற்கான விளக்க அறிவிப்புக்கு பதிலைச் சமர்ப்பிக்கத் தவறியதற்காக நிறுவனம் ஒன்றின் வணிக உரிமத்தை எம்பிபிஜே ரத்து செய்தது.

அந்நிறுவனம் ஒரு வாரத்திற்குள் பதிலைச் சமர்ப்பிக்கத் தவறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று எம்பிபிஜே கார்ப்பரேட் கம்யூனிகேஷன் யூனிட் மீடியா செயலகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.


Pengarang :