NATIONAL

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெள்ள நிலைமை அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்- நஜ்வான் அறிவிப்பு

ஷா ஆலம், நவ 6 –  உலு லங்காட்,  கம்போங் பாங்கி லாமா,   குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அப்பகுதியில் வெள்ள நிலைமையை மாநில அரசு  பேரிடர் மேலாண்மைப் பிரிவு மூலம் தொடர்ந்து கண்காணித்து வரும்.

இதுவரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 61 பேர்  தற்காலிக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறனார்.

கம்போங் பாங்கி லாமாவில் ஏற்பட்ட வெள்ளச் சம்பவத்தைத் தொடர்ந்து பாங்கி தேசியப் பள்ளியில் ஒரு தற்காலிக நிவாரண மையம் திறக்கப்பட்டு அதில் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களைச் சேர்ந்த 61பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இந்த வெள்ளச் சம்பவத்தில்  உயிரிழப்பு ஏற்படவில்லை. பேரிடர் மேலாண்மைப் பிரிவு மூலம் மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து  சுற்றியுள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் என்று அவர் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.

நேற்று அதிகாலை ஏற்பட்ட வெள்ளம் காரணமாக  தாமான் செமனி இண்டா மற்றும் கம்போங் பாங்கி லாமாவில் வசிக்கும் சுமார் 200 பேர் தற்காலிக துயர் துடைப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பொது மக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலிருந்து வெளியேற்றுவதற்கான  நடவடிக்கை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில  தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.


Pengarang :