NATIONAL

சுபாங் பரேட் ஷாப்பிங் மாலின் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தினால் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை

கோலாலம்பூர், நவ 6: நேற்று சுபாங் ஜெயா வில் உள்ள சுபாங் பரேட் ஷாப்பிங்
மாலின் அடித்தளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அசம்பாவித சம்பவங்கள்
எதுவும் ஏற்படவில்லை என்று கட்டிடத்தின் நிர்வாக நிறுவனம், ஹெக்டேர்
பிராப்பர்ட்டி சர்வீஸ் எஸ் டி என் பி ஹெச் டி உறுதிப்படுத்தியது.

அந்நிறுவனம் நிலைமையை தீவிரமாகக் கொள்வதாகவும், வணிகர்கள் மற்றும்
கட்டிடத்திற்கு வருபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அறிக்கை
ஒன்றின் மூலம் தெரிவித்தது.

“மேலும், வெள்ளத்தின் விளைவாக ஏற்படக்கூடிய சிரமங்களை நாங்கள்
புரிந்துகொள்கிறோம், ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் நாங்கள் மன்னிப்பு
கேட்டுக் கொள்கிறோம். சுபாங் பாரேட்டில் நிலையை மீண்டும் பழைய நிலைக்கு
கொண்டு வர நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இச்சம்பவம் குறித்து நேற்றிரவு 8.39 மணிக்கு தனது தரப்புக்கு அவசர
அழைப்பு வந்ததாகவும் உடனே சுபாங் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்த தாகவும்
மலேசியா சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை  (ஜேபிபிஎம்) உதவி
இயக்க இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

“சம்பவ இடத்திற்கு வந்தபோது, அடித்தளத் தளத்தின் ஒரு பகுதியில் ஓர் அடி
(30 சென்டிமீட்டர்) உயரம் வரை வெள்ளம் இருந்ததைக் கண்டறிந்தோம். பின்,
நீரின் அளவு குறையத் தொடங்கியது,” என்று அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.


Pengarang :