NATIONAL

ஒப்பந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய கல்வியமைச்சுத் திட்டம்

அலோஸ்டார், நவ 6- காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை
நிரப்புவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய
கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளது.

அண்மையில் 9,552 டிஜி41 பதவிகளுக்கு 9,552 ஆசிரியர்களை நிரந்தரமாக
பணியமர்த்தும் திட்டத்தின் கூடுதல் நடவடிக்கையாக இந்த ஒப்பந்த
ஆசிரியர் நியமனம் அமைவதாக கல்வியமைச்சின் தலைமைச் செயலாளர்
டத்தோ பக்ருடின் கசாலி கூறினார்.

நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை
பணியமர்த்தவிருக்கிறோம். சில துறைகளுக்கு (ஆசிரியர்) ஆசிரியர்களை
நியமனம் செய்யும் நடைமுறையை மேம்படுத்தவிருக்கிறோம் என்று
அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற மாவட்ட உருமாற்று மாநாட்டின் ஒரு
பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வியமைச்சின் தலைமைச்
செயலாளருடனான சிறப்பு நேர்காணல் நிகழ்வின் போது அவர் இதனைத்
தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு
பொது மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களுடன் அமைச்சு தொடர்ந்து
பேச்சுவார்த்தை நடத்தும் என்று அவர் சொன்னார்.

இவ்வாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பணி நியமனத்தில் 9,552 கல்வி
பட்டதாரிகளுக்கு டிஜி41 கிரேட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக
கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.


Pengarang :