SELANGOR

மாற்றுத்திறனாளிக்களுக்கான கேரியர் கார்னிவல் நேர்முகத் தேர்வில் மொத்தம் 43 பங்கேற்பு – அனிஸ்

ஷா ஆலம், நவ 6: கடந்த வாரம் சிலாங்கூர் சிறப்பு குழந்தைகள் துறை (அனிஸ்)
ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிக்களுக்கான கேரியர் கார்னிவலின் நேர்முகத்
தேர்வில் மொத்தம் 43 மாற்றுத்திறனாளி இளைஞர்கள் (OKU) கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் சமூகப் பாதுகாப்பு அமைப்பு அலுவலகத்துடன் (சொக்சோ) இணைந்து
மாற்றுத்திறனாளிகள்  வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கான திறனை
வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
அனிஸ் தெரிவித்துள்ளது.

“இந்த நிகழ்ச்சியின் மூலம்,  மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை
பற்றி அறிந்து கொள்ளலாம் மற்றும் வேலை பெறுவதற்கான அவர்களின்
தகுதிகளையும் முன்னிலைப் படுத்தலாம்,” என்று முகநூல்  மூலம்
தெரிவிக்கப்பட்டது.

நேர்முகத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் AEON Co (M) Bhd,
Malayan Banking Berhad, Natural Wellness Industries Sdn Bhd மற்றும்
Edisi Juta Parking Sdn Bhd ஆகியவை அடங்கும்.

2023 பட்ஜெட்டில், மாநில அரசு அனிஸ்க்கு RM4 மில்லியனையும், சிலாங்கூரில்
உள்ள சிறப்புக் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு உதவித்
திட்டத்திற்காக RM1 மில்லியனையும் ஒதுக்கியது.


Pengarang :