SELANGOR

கோல லங்காட்டில் 300 குடும்பங்களுக்கு மனிதவள அமைச்சர் வாயிலாகத் தீபாவளி அன்பளிப்புகள் விநியோகம்

மோரிப், நவ 7- இவ்வார இறுதியில் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை
முன்னிட்டு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் மற்றும் எச்.ஆர்.டி. கேர்ப் மூலமாக கோலலங்காட் மாவட்டத்தில் உள்ள 300 வசதி குறைந்த குடும்பங்களுக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்டன.

கோல லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் கோல லங்காட்
நகராண்மைக் கழக இந்திய கவுன்சிலர்கள் மூலம் இந்த பொருள்கள்
சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

பெருநாள் கொண்டாட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினரும்
விடுபடாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த உதவிப் பொருள்கள்
வழங்கப்பட்டன. மோரிப் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்க மோரிப் பல்நோக்கு
மண்டபத்திலும் சிஜங்காங் தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு லாடாங் தெலுக் ஸ்ரீ
மகா மாரியம்மன் ஆலயத்திலும் இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.

கோலலங்காட்டில் வசிப்பவர்கள் மீது சிறப்பு அக்கறை காட்டிய மனித அமைச்சர் சிவகுமாருக்குக் கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பு அலுவலகம் மற்றும் இந்திய கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

கோலலங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரிதாஸ், கவுன்சிலர் கமலநாதன், உமா நந்தினி, பன்னீர் செல்வம் ஆகியோர்  300 குடும்பங்களுக்கு உணவு கூடைகளை  ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :