Budget

திடக்கழிவு மேலாண்மைக்கான செலவைக் குறைக்க பசுமை எரிசக்தி பூங்கா

ஷா ஆலம், நவ.10: சுல்தான் இட்ரிஸ் ஷா பசுமை எரிசக்தி பூங்காவின் (SISGE) நான்காம் கட்ட மேம்பாட்டுக்கு பின்  ஒரு நாளைக்கு 2,400 டன் குப்பைகளை எரித்து 130.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.

சுற்றுச்சூழல் தரம் மற்றும் தூய்மையைப் பேணுவதன் மூலம் திடக்கழிவு மேலாண்மைக்கான செலவைக் குறைக்க முடியும் என, டத்தோ மந்திரி புசார் கூறினார்.

இன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ இங்கு சமர்ப்பிக்கும் போது “திடக்கழிவுகளிலிருந்து மின்சாரம், அல்லது எரிபொருள் போன்ற வர்த்தகம் செய்யக்கூடிய பயனுள்ள பொருட்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் திட்டம் கூடுதல் பயனளிக்கும் என அவர் தெரிவித்தார்.

தனியார் நிதியின் (PFI) மூலம் ( RM 4.5 பில்லியன்) 450 கோடி செலவில், உருவாகும் இந்த பூங்கா சிலாங்கூரை திடக்கழிவு மேலாண்மையில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடக்கூடியதாக மாற்ற கூடியது  என்றார்.

முதல் சிலாங்கூர் திட்டத்திற்கு (RS-1) இணங்க மறுசுழற்சி நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு  ஆதரவளிக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை, ஒவ்வொரு உள்ளாட்சியிலும் சிலாங்கூர் மறுசுழற்சி வசதிகளை உருவாக்கி உள்ளது என்று அமிருடின் கூறினார்.


“இந்த திட்டமானது மறுசுழற்சி மையத்திற்கு அனுப்பப்படும் கழிவுகளைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதனால் கழிவுகளை அகற்றுவதற்கான ஊதியத்தை வழங்குவதற்கான மாநிலத்தின் செலவுகளை மிச்சப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :