Budget

சேவைகளின் தரத்தை மேம்படுத்த உள்ளாட்சி சேவை ஆணையம் நிறுவப் படும்

ஷா ஆலம், நவ. 10: மக்களின் புகார்களுக்கு பதிலளிக்கும் காலம் உள்ளிட்ட சேவைகளின் தரத்தை மேம்படுத்த உள்ளாட்சி சேவை ஆணையம் அடுத்த ஆண்டு நிறுவப்படும்.

டத்தோ மந்திரி புசார் இன்று சிலாங்கூர் பட்ஜெட் 2024 ஐ சமர்பிக்கும் போது ஆணையத்தை உருவாக்கும் செயல்முறை இந்த முறை மாநில சட்டமன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.

ஒவ்வொரு உள்ளாட்சியிலும் வாழத் தகுந்த மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குவதற்காக ஆணையம் நிறுவப்படும். இதனால் சிலாங்கூர் நேர்த்தியான  மாநிலமாக மாறும் என்றார்.

சிலாங்கூர் மலேசியாவில் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்டுள்ளது, இது இப்போது 7 மில்லியனை எட்டியுள்ளன. நகரமயமாக்கலின் முக்கிய சவால்களில் மக்கள் தொகை பெருக்கம், திடக்கழிவு மேலாண்மை, சாலை பராமரிப்பு, வடிகால் சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற அம்சங்கள் உள்ளன.


“ஒவ்வொரு பிபிடியிலும் வாழக்கூடிய மற்றும் நிலையான நகரங்களை உருவாக்குவதைத் தவிர, சிலாங்கூர் தூய்மையான சூழலைக் கொண்ட மாநிலமாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கழிவு மேலாண்மை பலப்படுத்தப்பட வேண்டும், நாங்கள் மெத்தனமாக இருக்க முடியாது. பொறுப்பற்ற முறையில் குப்பைகளை வீசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :