SELANGOR

ஒராங் அஸ்லி சமூகத்திற்கு RM2.5 மில்லியன் ஒதுக்கீடு

ஷா ஆலம், நவ 20: ஒராங் அஸ்லி சமூகம் ஒருபோதும் ஓரங்கட்டப்படவில்லை, மற்ற இனங்கள் போல் சமமான உரிமையைப் பெற்றுள்ளது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட சிலாங்கூர் பட்ஜெட் 2024, மாநில நிர்வாகம் எப்போதும் சம்பந்தப்பட்ட சிறுபான்மையினரின் நலனில் அக்கறை செலுத்துகிறது என்பதற்குச் சான்றாகும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“நாங்கள் சிறப்பு ஏற்பாடுகளை அமைத்துள்ளோம். அவற்றில் ஒராங் அஸ்லி சமூகத்தின் குடியிருப்புப் பகுதிகளில் வர்த்தமானிகளுக்கு 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் வீடுகளைச் சீரமைக்க நாங்கள் கூடுதலாக 1 மில்லியன் ரிங்கிட் தயார் செய்துள்ளோம், இதனால், அவர்கள் வசதியான வாழ்க்கை வாழ முடியும்.

“இப்போது பொருட்களின் விலை உயர்வை எதிர் கொள்வதைக் கருத்தில் கொண்டு உணவுக் கூடை திட்டத்திற்காக RM500,000 ஒதுக்குகிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் சகோங் தாசி உதவித் தொகையைத் தொடர நிர்வாகம் குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது, குறிப்பாகப் பழங்குடியின மக்களின் குழந்தைகள் உயர் கல்வியைத் தொடர்வதற்கு ஆகும்.

“பல்கலைக்கழக நிலை மட்டுமல்ல, உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் தங்கள் கல்வியை மேற்கொள்ள முடியும்” என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு பட்ஜெட் திட்டத்தின் மூலம், சிலாங்கூர் அரசாங்கம் ஒராங் அஸ்லி சமூகத்திற்கு RM2.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இது வரலாற்றில் மிக அதிகமான தொகையாகும்.


Pengarang :