NATIONAL

பூமிபுத்ரா கோட்டாவை நிறைவு செய்யாத  மேம்பாட்டாளர்கள்  கருப்பு பட்டியலிடப்படுவர்- அபராதம் விதிக்கப்படும்

ஷா ஆலம், நவ. 20 – பூமிபுத்ரா ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்யத் தவறும்  சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த மேம்பாட்டாளர்கள்  கருப்புப் பட்டியலிப்படும் அதே வேளையில் அவர்களுக்கு   அபராதமும் விதிக்கப்படும் என்று வீடமைப்புத் துறைக்கான ஆடசிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா கூறினார்.

சிலாங்கூர் வீட்டுடைமை பெருந்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி  ஒதுக்கீட்டு நிபந்தனை  பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

மேம்பாட்டாளர்கள் இந்த நிபந்தனையை கடைபிடிக்கத் தவறினால் அல்லது பூமிபுத்ரா அல்லாதோருக்கான வீடுகளின் விற்பனையை அவர்கள் தாண்டியிருந்தால், ‘கட்டுப்பாடற்ற ஒப்புதல்’ அல்லது ‘கட்டுப்பாடற்ற அனுமதி’ செயல்முறையைத் தொடர முடியாது.

சிலாங்கூர் வீட்டுவசதி மற்றும் சொத்துடைமை வாரியத்திடம்  பூமிபுத்ரா கோட்டா விலக்களிப்புக்கான விண்ணப்பங்களைச் செய்வதிலிருந்து சம்பந்தப்பட்ட பேம்பாட்டாளர்கள் கருப்புப் பட்டியலிடப்படுவர். மேலும் அவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படும் என்று அவர் இன்று மாநில சட்டமன்றக் கூட்டத்தில் கூறினார்.

பூமிபுத்ரா வீடுகள் பூமி அல்லாதவர்களுக்கு விற்பனை செய்வது தொடர்பில்  சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிச்செல் எங் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு  பதிலளித்தார்.

மாநிலத்தின் வீட்டுடைமைத் பெருந்திட்ட  வழி காட்டுதலுக்கேற்ப  பூமிபுத்ரா ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதற்கான தற்போதைய வழிமுறையை மாநில அரசாங்கம் தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது என்று பொர்ஹான் தெரிவித்தார்.


Pengarang :