SELANGOR

உலு சிலாங்கூரிலிருந்து உலு லங்காட் வரையில் 120 கிலோமீட்டர் நீளமுள்ள பாதை அமைப்பு

ஷா ஆலம், நவ 28: உலு சிலாங்கூரிலிருந்து உலு லங்காட் வரையிலான மத்திய வனத்தின் (CFS) குறுக்கே 120 கிலோமீட்டர் நீளமான பாதையை சுற்றுலாத் தலமாக உருவாக்க சிலாங்கூர் திட்டமிட்டுள்ளது.

சிலாங்கூர் மாநில வனவியல் துறை (ஜேபிஎன்எஸ்) ஏற்பாடு செய்திருக்கும் பாதையின் கட்டுமானமும் சிலாங்கூர் அரச பாரம்பரியக் காடுகளின் பிரகடனத்தின் ஒரு பகுதியாகும் என்று டத்தோ மந்திரி புசார் விளக்கினார்.

“அப்பாதையை உருவாக்க முடிந்தால், இது சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கும்.

“இந்தப் பாதையின் கட்டுமானம் எதிர்காலத்தில் ஒரு சுற்றுலா தளமாகப் பயன்படுத்தப்படலாம்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று சிலாங்கூர் அரச பாரம்பரிய வன அறிவிப்பு விழாவிற்குப் பிறகு கூறினார்.

108,000 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட சிலாங்கூர் அரச மரபுரிமைக் காடுகளாக 26 வன காப்பகங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.


Pengarang :