NATIONAL

இந்தியர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தொழில் திறன் துறைகள் மேம்படுத்தப்படும்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், டிச 1- நாட்டில் இந்தியர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தொழில் திறன் வாய்ப்புகள் மேம்படுத்தப்படும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் அறிவித்தார்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.

இதை இந்தியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மலேசிய வர்த்தகச் சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.

தொழில் திறன் தொழிற்கல்வி சிறந்த எதிர் காலத்தை கொண்டுள்ளது.
முறையான தொழிற்பயிற்சியைப் பெறுவார்களேயானால் அவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.

இப்போது சைபர் சிட்டி துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள் உள்ளன. இதையும் இந்தியர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் . நாம் எப்போதும் அந்நிய தொழிலாளர்களையே நம்பி இருக்க முடியாது.

உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும்  முதலாளிகள் இருக்கிறார்கள் .
ஆகவே, சிறப்பான எதிர்காலம் இருப்பதால் இதை நம்மவர்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார் அவர்.


Pengarang :