SELANGOR

சுபாங் ஜெயா குடியிருப்புகளில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம்

ஷா ஆலம், டிச 1: சுபாங் ஜெயாவைச் சுற்றியுள்ள தொடர் வீடுகளின் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் திட்டம்  2 மண்டலங்களில்  இன்று தொடங்குகிறது என்று KDEB கழிவு மேலாண்மை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் சுபாங் ஜெயா தொகுதி அலுவலகத்துடன் இணைந்து SS12 முதல் SS19 வரை, வங்சா பைடூரி, PJS 7,9 மற்றும் 11இல் கவனம் செலுத்துப் படுகிறது என அதன் நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.

அலுமினியம், பிளாஸ்டிக் மற்றும் உலர் காகிதங்களை மட்டுமே மறுசுழற்சி செய்ய முடியும். குடியிருப்பாளர்கள் அவற்றை  பைகளில்  இட்டு முறையாக கட்டி அகற்ற வேண்டும்  என டத்தோ ராம்லி முகமட் தாஹிர் என்று கூறினார்,

“தளவாட பொருட்கள், மின்சார சாதனங்கள், விளையாட்டு பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், உடைகள் மற்றும் கட்டுமான கருவிகள் போன்ற பிற கழிவுகள் அனுமதிக்கப்படாது. மேலும், வாரத்திற்கு மூன்று முறை சேகரிப்பு செய்யப்படும்,” என்று அவர் கூறினார்.

மறுசுழற்சியின் முக்கியத்துவம் குறித்து குடியிருப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த மூன்று மாதங்களுக்குள் முதல் கட்டம் வெற்றி பெற்றால், சுபாங் ஜெயாவில் உள்ள மற்ற இடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.

“தற்போது 17 சதவீதமாக இருக்கும் மறுசுழற்சி விகிதத்தை அதிகரிக்க இந்த அணுகுமுறை திறன் கொண்டது என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று ராம்லி மீண்டும் கூறினார்.


Pengarang :