NATIONAL

தமிழ்ப்பள்ளிகளுக்குப் பக்கப்பலமாக இருப்பேன்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

புத்ரா ஜெயா, டிச 5 – மலேசிய திருநாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகள் மேம்பாட்டிற்கு தொடர்ந்து பக்கப் பலமாக இருப்பேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

எனது தொடக்க காலம் முதல் இதுநாள் வரை தமிழ்ப் பள்ளிகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறேன்.

இதற்கு முன்னர் நாடாளுமன்றத்திலும் தமிழ்ப் பள்ளிகள் குறித்து கேள்வி எழுப்பியும்  களத்தில் இறங்கி போராடியும் இருக்கிறேன்.

அந்த வகையில் தமிழ் பள்ளிகளுக்கு எப்போதும் பக்கப்பலமாக இருப்பேன் என்று அவர் சொன்னார்.

தமிழ்ப்பள்ளிகளின் நலன்புரி இயக்கங்களின் கூட்டமைப்பு  தலைவர் வெற்றி வேலன்
தலைமையில்  தமிழ் ஆர்வலர்கள் இன்று அமைச்சர் சிவகுமாரை சந்தித்து தமிழ்ப் பள்ளிகள் எதிர் காலம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையை நடத்தினர்.

இந்த சந்திப்பில் பேசிய அமைச்சர் சிவகுமார், தமிழ்ப்பள்ளிகள் நலன் கருதி போராடும் அனைத்து தரப்பினருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்றார்

இந்த சந்திப்பில் மகேஷ் ராமு, முனைவர் டாக்டர் குமரன் வேலு, ஜோன்சன் விக்டர், பாஸ்கரன் சுப்பிரமணியம், அருண் துரைசாமி, சுப்பிரமணியம் கண்ணன், குணசீலன், ஜெகன் மாணிக்கம், அ. சுப்பிரமணியம்,எஸ்.எஸ்.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :