NATIONAL

எதிர்கால சவால்களைச் சமாளிக்க கூடுதல் திறமைகளை மாணவர்கள் வளர்ந்து கொள்ள வேண்டும்! அமைச்சர் சிவக்குமார் வேண்டுகோள்

சைபர் ஜெயா,டிச 8- வருங்கால சவால்களை சமாளிக்க மாணவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்ளவது நல்லது என்று மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

இனி வரும் காலங்களில் சவால்கள் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மாணவர்கள் ஒரு துறையில் படித்தாலும் அவர்கள் கூடுதல் திறமைகளை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அப்போதுதான் அவர்கள் மற்ற மாணவர்களுடன் போட்டியிட முடியும் என்றார் அவர்.

ஒவ்வொரு மாணவருக்கும் எதாவது ஒரு திறமை இருக்கும். அதோடு சேர்ந்து மேலும்   ஒரு துறையை இணைந்து கொண்டால் அவர்களுக்குச் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது.

மேலும் தொழில் திறன் கல்வியையும் அவர்கள் கற்றுக் கொள்வது மிகவும் சிறப்பு என்று இன்று சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீபாவளி உபசரிப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

சைபர் ஜெயா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டான்ஸ்ரீ  டத்தோ டாக்டர் ஆர். பாலன், இணைவேந்தர் மகாபாலன், சைபர் ஜெயா கல்வி குழுமத்தின் நிர்வாக தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜாபிடி ஹூசேன் உட்பட பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் , மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.


Pengarang :