NATIONAL

இ.பி.எஃப். தலைமைச் செயல்முறை அதிகாரி அமிர் ஹம்சா இரண்டாவது நிதியமைச்சராக நியமனம்

கோலாலம்பூர், டிச 12- இன்று அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில்
ஊழியர் சேம நிதி வாரியத்தின் (இ.பி.எஃப்.) தலைமைச் செயல்முறை
அதிகாரி டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஜிசான் இரண்டாவது நிதியமைச்சராக
நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் இன்று காலை 11.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலுள்ள
பிரதமர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

முன்னதாக அமிர் ஹம்சா, நாடாளுமன்றத்தில் செனட்டராக பதவியேற்றுக்
கொண்டார்.

நிதியமைச்சராக நியமிக்கப்படும் வர்த்தகத் துறை சார்ந்த பின்னணியைக்
கொண்ட தொழில்நுட்ப வல்லுநராக அமிர் ஹம்சா விளங்குகிறார். நிதி
மேலாண்மை ரீதியில் நாட்டின் மிகப்பெரிய ஓய்வுதிய நிதிக் கழகமாக
விளங்கும் இ.பி.எஃப்.பின் தலைமைச் செயல் முறை அதிகாரியாக அமிர்
ஹம்சா கடந்த 2021 மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார்.

அதற்கு முன்னர் அவர் கடந்த 2019 ஏப்ரல் முதல் 2021 பிப்ரவரி வரை
தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறைய
அதிகாரியாவும் தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.


Pengarang :