SELANGOR

இந்தோனேசிய சந்தையில் ஊடுருவ ஹலால் இண்டர்நேஷனல் சிலாங்கூர் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 12- இந்தோனேசிய சந்தையில் ஊடுருவுவதற்காக
மலேசிய வெளி வர்த்தக மேம்பாட்டு கழகத்துடன் (மாட்ரேட்) ஹலால்
இண்டர்நேஷனல் சிலாங்கூர் ஒத்துழைப்பை நல்கும்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள ஹலால் தொழில்முனைவோர் தங்கள்
உற்பத்தி பொருள்களை இந்தோனேசியாவில் சந்தைப் படுத்துவதற்கான
வாய்ப்புகளை இந்நடவடிக்கை அதிகப்படுத்தும் என்று அந்த் அமைப்பு
கூறியது.

மாட்ரேட்டுனான சந்திப்பு சிலாங்கூர் ஹலால் பொருள்களை
இந்தோனேசியாவில் சந்தைப்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவதை
பிரதமான நோக்கமாக கொண்டுள்ளது. அந்நாட்டுச் சந்தைக்குச் சிலாங்கூர்
மாநிலப் பொருள்களை அதிகளவில் கொண்டுச் செல்வதில்
ஒருவருக்கொருவர் உதவ இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஹலால் இண்ர்நேஷனல் சிலாங்கூர் பேராளர் குழுவினர் அண்மையில்
இந்தோனேசியாவிலுள்ள மாட்ரேட் அலுவலகத்திற்குச் சென்ற போது இந்த
ஒத்துழைப்பு தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது என அது தனது
பேஸ்புக் பதிவில் கூறியது.

இந்த வருகையின் போது 2024ஆம் ஆண்டு அனைத்துலக சிலாங்கூர்
ஹலால் கண்காட்சி மற்றும் மாநாட்டை பிரபலப்படுத்துவதற்கான
நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்ட வேளையில் இந்த நிகழ்வில்
இந்தோனேசிய தொழில்முனைவோரின் பங்கேற்பதை உறுதி
செய்வதற்கான முயற்சிகளை எடுக்கவும் மாட்ரேட் உறுதியளித்துள்ளது.


Pengarang :