ANTARABANGSA

ஓப்ஸ் ஏஹ்சான்- பாலஸ்தீனத்திற்கான மூன்றாம் கட்ட உதவிப் பொருள்கள் எகிப்தை அடைந்தன

கோலாலம்பூர், டிச 20 – பாலஸ்தீனத்திற்கான ஓப்ஸ் ஏஹ்சான் மூன்றாம்
கட்ட உதவிப் பொருள்களை ஏற்றிய விமானம் நேற்று முன்தினம்
விடியற்காலை 2.00 மணிக்கு புறப்பட்டு உள்ளுர் நேரடிப்டி காலை 7.50
மணிக்கு எல் அரிஷ் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.

இரு செய்தியாளர்கள் உள்பட பத்து பணியாளர்களுடன் புறப்பட்ட இந்த
ஓப்ஸ் ஏஹ்சான் குழு, 11 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் தனது
பயண இலக்கை அடைந்தாக ஓப்ஸ் ஏஹ்சான் செயலகம் அறிக்கை
ஒன்றில் தெரிவித்த து.

மாஸ்கார்கோவுக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ330-200 ரக வாடகை
விமானத்தை எல்-அரிஷ் விமான நிலைய அதிகாரிகளும் எகிப்து நாட்டின்
செம்பிறைச் சங்க சங்க பிரதிநிதிகளும் வரவேற்றனர்.
அந்த விமானத்திலிருந்த உதவிப் பொருள்களை இறக்குவதற்கு ஒரு மணி
நேரம் பிடித்ததாக அந்த அறிக்கை கூறியது.

அந்த பொருள்கள் எகிப்தில் உள்ள செம்பிறைச் சங்கத்திடம்
ஒப்படைக்கப்பட்டது. ராஃபா எல்லை வழியாக அப்பொருள்களை எகிப்து
செம்பிறைச் சங்கத்தினர் கொண்டுச் சென்று பாலஸ்தீன செம்பிறைச்
சங்கத்திடம் ஒப்படைப்பர்.

அப்பொருள்களை காஸாவிலுள்ள மருத்துவமனைகள் மருத்துவமனைகள்
மற்றும் தேவைப்படும் பொது மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். மருந்துகள்,
மருத்துவ உபகரணங்கள், உணவு, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு
தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்கள் அதில் அடங்கியுள்ளன. சுமார்
60 டன் எடை கொண்ட இந்தப் பொருள்களின் மதிப்பு 30 லட்சம்
வெள்ளியாகும்.


Pengarang :