NATIONAL

ஜொகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டமாக மெர்சிங் விளங்குகிறது

ஜொகூர் பாரு, டிச 27 –  நேற்று  அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கன மழையைத் தொடர்ந்து மெர்சிங்கில் வெள்ளம் ஏற்பட்டது. ஜொகூர் மாநிலத்தில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டமான இதில்  தற்காலிக நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேரை தங்க வைப்பதற்கு தாமான் நெகாரா எண்டாவ் ரொம்பின்  தொகுதி வளாகத்தில்  நிவாரண மையம் நேற்று மாலை 6.00 மணிக்கு திறக்கப்பட்டதாக மெர்சிங் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவர் முகமது ஷாகிப் அலி கூறினார்.

பேத்தா பூர்வக் குடியினர் கிராமம் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக விளங்குகிறது.  நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டுள்ளது அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், தெங்காரோ தீமோர் மற்றும் மெர்சிங் செல்லும் சாலை வெள்ளம் காரணமாக அனைத்து வகையான வாகனங்களுக்கும் மூடப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நேற்றிரவு  இரவு 8.30 மணி முதல் வெள்ள அபாய கண்காணிப்பைத் தாங்கள்  தொடங்கியுள்ளதாக மெர்சிங் மாவட்ட பொது தற்காப்பு படை (ஏ.பி.எம்.) கூறியது.

கண்காணிக்கப்படும் பகுதிகளில் புலாவ் தெங்லு, கம்போங் ஆயர் பாப்பான் மற்றும் கம்போங் செர்மின் ஆகிய கிராமங்களும் அடங்கும் என்று அது தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.


Pengarang :