SELANGOR

RM3,393,885.80 வணிக உரிமக் கட்டணத்தை எம்பிஏஜே வசூலித்துள்ளது

ஷா ஆலம், டிச 27: டிசம்பர் 19 வரை RM3,393,885.80 வணிக உரிமக் கட்டணத்தை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) வசூலித்துள்ளது.

இந்த வசூல் 4,910 வளாகங்கள் iCOMM மூலம் தங்கள் உரிமங்களை புதுப்பித்துள்ள நிலையில், மேலும் 223 வளாகங்கள் உரிமங்களை கைமுறையாகப் புதுப்பித்துள்ளதை உள்ளடக்கியது என அதன் தலைவர் டாக்டர் ஐனி அஹ்மட் கூறினார்.

“கூடுதலாக, மொத்தம் 4,087 வணிகர்கள் ஈ-பென்ஜாஜா முறையின் மூலம் 2024 குறு தொழில் முனைவோர் உரிமத்தைப் புதுப்பித்துள்ளனர். இதன் மூலம் RM 500,750.81 வசூலிக்கப்பட்டது.

“டிசம்பர் 31க்குப் பிறகு தங்கள் உரிமத்தைப் புதுப்பித்தால் RM 360 அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் சமீபத்தில் கூறினார்.

ஒருங்கிணைந்த ஒப்புதல் அமைப்பின் (SKB) செயல்பாட்டிற்கு ஏற்ப மதிப்பீட்டு வரியை மற்றும் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு வரியைச் செலுத்த உரிமை தாரர்களுக்கு நினைவூட்டப்படுவதாக ஐனி வலியுறுத்தினார்.

“தாமதத்திற்கான அபராதம் தொடர்பான எந்த மேல்முறையீடு பரிசீலிக்க படாது,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, வணிக வளாக உரிமம் புதுப்பித்தல்கள் “iCOMM MPAJ“ [email protected] இல் முற்றிலும் இணையம் வழி மேற்கொள்ளப்படும் என்றும், குறு தொழில் முனைவோர் உரிமம் புதுப்பித்தல்களை intranet.mpaj.gov.my e-Penjaja இல் மேற்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :