SELANGOR

குழந்தை கல்வி டிஜிட்டல் பயன்பாட்டைப் பற்றிய பட்டறை 

ஷா ஆலம், ஜன. 5: அனாக் பிந்தார் குழந்தை பராமரிப்பு உதவித் திட்டம் மற்றும் சிலாங்கூர் மழலையர் பள்ளி உதவித் திட்டத்தில் கிட்டத்தட்ட 200 பெறுநர்கள் குழந்தைகளுக்கான கல்வியில் டிஜிட்டல் பயன்பாடு பற்றிய பட்டறையில் கலந்து கொண்டனர்.

குழந்தைகள் பயன்படுத்தும் சில சாதனங்களுக்கு  அவர்கள் அடிமையாகும் போக்கைக் கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காகத் தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்துடன் (LPPKN) இணைந்து இத்திட்டத்தை ஏற்பாடு செய்ததாக மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“இந்நிகழ்ச்சி ஆறு தொடர்களில் நடைபெற உள்ளது (ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுகிறது). மேலும் அவை ஒவ்வொன்றும் 30 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியது.

“தேசிய மக்கள்தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் (LPPKN) வல்லுநர்கள் குழந்தைகளுக்குக் கல்வி கற்பிப்பதில் டிஜிட்டல் பயன்பாட்டைப் பற்றி விவரிப்பார்கள். குழந்தைகள் சில சாதனங்களுக்கு  அடிமையாகாமல் இருக்க, அவற்றை எவ்வாறு கையாள்வது போன்ற தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்,” என்று சிலாங்கூர்கினியிடம் அன்பால் சாரி கூறினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், குழந்தைகள், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் (OKU) பராமரிப்பு துறை தொடர்பான விதிமுறைகளை  சிலாங்கூர் இயற்றும் என டத்தோ மந்திரி புசார் கோடி காட்டினார்.

மேலும், பாதுகாப்புக்காக தற்போதுள்ள பராமரிப்பு மையங்களை ஒருங்கிணைக்கும் கொள்கையுடன் கூடுதலாக, மாநிலத்தின் வளர்ச்சியில் பெண்களின்  பங்களிப்பு மற்றும்  ஆற்றலை அதிகரிக்க  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.


Pengarang :