NATIONAL

தீயணைப்பு வாகனம்  செல்ல வழியில் இடையூறாக  இருந்த நபருக்கு சம்மன் 

அலோர் ஸ்டார், ஜன 10: கடந்த ஞாயிற்றுக்கிழமை கூலிமுக்கு அருகிலுள்ள ஜாலான் லூனாஸ்-பாடாங் செராய் என்ற இடத்தில் தன்னார்வத் தீயணைப்பு படையின் வாகனத்திற்கு வழி விடாத  ஒருவருக்கு எதிராக காவல்துறையினர் சம்மன் வழங்கினர்.

நேற்று சமூக ஊடகங்களில் வைரலான 40 வினாடி வீடியோ பதிவை அவரது தரப்பு கண்டறிந்துள்ளது. அந்த வீடியோ ’’அவசர வழியில் தீயணைப்புப் படை வாகனத்திற்கு வழிவிட மறுத்த வாகனத்தின்’’ செயலை காட்டுகிறது என கூலிம் மாவட்ட காவல் துறைத் தலைவர் முகமட் அஜிசுல் முகமட் கைரி தெரிவித்தார்.

“இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடந்தது. காது கேளாமை பிரச்சனை உடைய 59 வயது மதிப்பு தக்க நபர், கூலிம் மாவட்டக் காவல்துறை தலைமையகப் போக்குவரத்து நிலையத்திற்கு (IPD) வரவழைக்கப்பட்டு அவருக்கு சம்மன் வழங்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

– பெர்னாமா


Pengarang :