NATIONAL

ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் அந்நிய பிரஜை கைது

கோலாலம்பூர், ஜன 22- அம்பாங், தாமான் மூடாவில் கடந்தாண்டு நவம்பர் 22 ஆம் தேதி வளர்ப்பு பிராணிகள் விற்பனை கடையில் கூட்டாக ஆயுதமேந்தி கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் அந்நிய நாட்டு ஆடவன் ஒருவனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அக்கடையின் உரிமையாளரான 54 வயது நபரிடமிருந்து கிடைத்த புகாரைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அம்பாங் வட்டாரத்தில் 31 வயதுடைய அந்த ஆடவரை தாங்கள் கைது செய்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது அஸாம் இஸ்மாயில் கூறினார்.

அன்றைய தினம்  மாலை 3.56 மணியளவில் அந்த சந்தேகப் பேர்வழி கடையில் நுழைந்து பாராங் கத்தியைக் காட்டி கடை உரிமையாளரிடம் கொள்ளையிட்ட வேளையில் அவனது சகா கடைக்கு வெளியே காத்திருந்துள்ளான் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.…

இதனிடையே,  மின்சாரக் கேபிள் திருட்டு தொடர்பாக போதைப்பொருள் வழக்கு தொடர்பில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ஆடவன் ஒருவன் ஓவர்சீஸ் யூனியன் கார்டனில் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப் பட்டதாக அவர் சொன்னார்.

அன்றைய தினம் காலை 11.49 மணியளவில் பொறியாளர் ஒருவர் செய்த புகாரின் அடிப்படையில் 34 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சுமார் 6,000 வெள்ளி மதிப்புள்ள 150 மீட்டர் நீள கேபிளை அந்த ஆடவன் வெட்டி எடுத்துச் சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்ததாக அவர் மேலும் சொன்னார்.

லோரி ஓட்டுநரான அந்த சந்தேகப் பேர்வழி போதைப் பொருள் பழக்கம் கொண்டவன் என்பது சிறுநீர் சோதனையில் கண்டறியப்பட்டதாகக் கூறிய அவர், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 18 முந்தைய குற்றப்பதிவுகள் அவன் கொண்டுள்ளது கண்டறியப்பட்டது என்றார்.

Pengarang :