SELANGOR

காஜாங் இடைநிலைப் பள்ளியின் ஒரு பிளாக்கைப் புதுப்பிக்க RM100,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 22: மக்கள் நட்பு திட்டத்தின் மூலம் காஜாங் இடைநிலைப் பள்ளியின் ஒரு பிளாக்கைப் புதுப்பிக்க பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் RM100,000 ஒதுக்கீடு செய்துள்ளார்.

குறிப்பிட்ட பிளாக்கில் நான்கு வகுப்பறைகள் உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிலை காரணமாக உடனடியாக மேம்படுத்தப்பட வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்  ஷாரெட்ஷான் ஜோஹான் விளக்கினார்.

பராமரிப்பு திட்டத்தில் கிரில்கள் மற்றும் கூரைகளை மாற்றுதல், சாயம் பூசுதல், தரையை சரி செய்தல் ஆகியவை அடங்கும். அவ்விடம் அடுத்த வாரம் முழுமையாக செயல்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“இந்த பள்ளி பிரபலமானது மற்றும் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. அதுமட்டுமில்லாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த பிளாக் பயன்படுத்தப்படாமல் உள்ளது,” என்று அவர் கூறினார்.

மாணவர்களுக்கு வசதியான சூழலை வழங்குவதை உறுதி செய்வதற்காகத் தனது தொகுதியில்  உள்ள மேலும் சில பள்ளிகள் அதே பலன்களை படிப்படியாகப் பெறும் என்றும் அவர் கூறினார்.

“இந்த மேம்படுத்தல் உதவி 2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதிர்கால சந்ததியினருக்குக் கல்வி முக்கியம் என்பதால் பள்ளிகள் போன்ற அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்” என்று அவர் கூறினார்.


Pengarang :