NATIONAL

மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க 18 மணி நேரம்

நிபோங் திபால், ஜன 23 – நேற்று மாலை ஜாலான் கிரியான், சுங்கை ஜாவி என்ற இடத்தில் உள்ள மரத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் 18 மணி நேரத்திற்கும் மேலாக போராடினர்.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று மாலை 6.53 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, 140 சதுர மீட்டர் பரப்பளவு மர பதப்படுத்தும் தொழிற்சாலையில் தீ ஏற்பட்டு இருந்ததாகவும் பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

“தொழிற்சாலையின் 80 சதவிகிதம் தீயில் எரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க சுமார் 18 மணிநேரம் எடுத்து கொண்டார்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், ஒன்பது தன்னார்வ தீயணைப்பு குழுக்களுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணத்தை அவர்கள் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், இழப்புகள் இன்னும் மதிப்பிடப் படவில்லை என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தீயினால் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

– பெர்னாமா


Pengarang :