NATIONAL

சபா முதல்வருடன் டத்தோ மந்திரி புசார் அதிகாரப்பூர்வ சந்திப்பு

ஷா ஆலம், ஜன 23: இன்று, சபா முதல்வர் டத்தோ ஹாஜி நூருடன் கோத்தா கினாபாலு வில் உள்ள தலைமைச் செயலகத்தில் அதிகாரப்பூர்வ சந்திப்பு ஒன்றை டத்தோ மந்திரி புசார் நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது உணவு பாதுகாப்பு, இரு மாநிலங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“இது குறிப்பாகச் சோள தானிய பயிர்கள் மற்றும் மாடு போன்ற கால்நடைகளை உள்ளடக்கியது. இதனால், இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களை சார்ந்திருப்பதை நாம் ஒன்றாகக் குறைக்க முடியும்.

மேலும், இது மூல உணவுப் பொருட்களின் விலையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது என முகநூலில் தெரிவித்துள்ளார்.

அதே கூட்டத்தில், நிலையான மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் செயல்பாட்டைக் கொண்ட சுற்றுலா சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் முறைகள் குறித்து தனது தரப்பு விவாதித்ததாக அமிருடின் கூறினார்.

“இதன் மூலம், சமூகத்தால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஊக்குவிப்பதில் உள்ளூர் பகுதிகளின் தனித்துவத்தைப் பாதுகாக்க முடியும்.

 உயர்தர கைவினைப் பொருட்கள் போன்ற உள்ளூர் தயாரிப்புகளை உருவாக்குவதில்  “நான் சபாவை முன்னணி மாநிலங்களில் ஒன்றாகப் பார்க்கிறேன்” ஆக,  இந்த துறையில்  நாங்கள் ஒத்துழைப்பை வழங்க விரும்புகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

முன்னதாக, சிலாங்கூர் அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் உடனான பணிப் பயணம் மேற்கொண்ட அமிருடினின் வருகையை சபா மாநிலச் செயலாளர் டத்தோஸ்ரீ பங்லிமா சஃபர் உந்தோங் வரவேற்றார்.

மேலும், இந்நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம், மாநில சட்ட ஆலோசகர் டத்தோ சலீம் சோயிப் மற்றும் மாநில நிதி அதிகாரி டத்தோ டாக்டர் அஹ்மட் ஃபட்ஸ்லி அகமட் தாஜுடின் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Pengarang :