SELANGOR

மறுசுழற்சி பொருட்களைப் பணமாக மாற்றிக் கொள்ள வாய்ப்பு 

ஷா ஆலம், ஜன 23: புக்கிட் காசிங்கைச் சுற்றியுள்ள மக்கள், சமூக சேவை மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘குப்பைக்கான பணம்’ திட்டத்தின் மூலம் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களைப் பணமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, டாமான்சாரா பிஸ்தாரி அடுக்குமாடி குடியிருப்பு, செக்‌ஷன் 19 மற்றும் ஆர்டி செயல்பாட்டு மையம், செக்‌ஷன் 6 பெட்டாலிங் ஜெயா ஆகிய இடங்களில் தொடரும் என்று சட்டமன்ற உறுப்பினர் ராஜீவ் ரிஷ்யகரன் கூறினார்.

“மாநில அரசின் பசுமை இலக்குகளுக்கு ஏற்ப குப்பைகளைப் பிரிக்க மக்களை ஊக்குவிப்பதோடு, பொருட்களைச் சேகரித்து கொடுப்பவர்களுக்கு இந்த  திட்டம் வருவாயையும் உருவாக்குகிறது,” என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

“ட்ராஷ்சைக்கிள் மலேசியா“வுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தத் திட்டம் குடியிருப்பாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது அதாவது கடந்த ஆண்டு ஒவ்வொரு சேகரிப்பு அமர்விலும் சுமார் 800 கிலோ மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் சேகரிக்கப்பட்டன என அவர் கூறினார்.

“பொதுமக்கள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது வாரத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நியமிக்கப்பட்ட இடத்தில் பொருட்களை ஒப்படைக்கலாம்.

“ஆனால், நான்காவது வாரத்தின் சனிக்கிழமையன்று மட்டுமே செக்‌ஷன் 6இல் உள்ள இடத்திற்கு வரவும்” என்று அவர் கூறினார்.

மேலும், சட்ட ஆலோசனை தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கு இலவசச் சட்ட உதவி திட்டத்தைத் தனது தரப்பு தொடரும் என்றும் ராஜீவ் தெரிவித்தார்.


“மேலும் அதன் தொடர்பான எந்த அறிவிப்பும் முகநூலில் வெளியிடப்படும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :