SELANGOR

கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் 4,000 க்கு மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 29: பிப்ரவரி 3ஆம் தேதி ஹம்சா மண்டபம், கிள்ளானில் நடைபெறவுள்ள கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் சிலாங்கூரில் மொத்தம் 4,028 வேலை வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

சமூகப் பாதுகாப்பு அமைப்பு (Socso) இணைந்து நடத்தும் இந்தத் நிகழ்வில் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் 27 முதலாளிகள் கலந்து கொள்ளவுள்ளதாக மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பா ராய்டு கூறினார்.

“புதிய வேலை வாய்ப்புகளை தேடுபவர்கள் அல்லது படித்து முடித்தவர்கள் என 2,000க்கும் மேற்பட்டவர்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்,” என்று அவர் மாநில அரசு நிர்வாக கட்டிடத்தில் சந்தித்தபோது கூறினார்.

இந்நிகழ்வு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் களுடன் நேரடியாக நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட வயது மற்றும் கல்வி நிலை வரம்பு எதுவும் இல்லை என்றும் பங்கேற்பாளர்கள் myfuturejobs.gov.my/careerfair/ இல் பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் விளக்கினார்.

“மக்களும் நேரடியாக வரலாம் மற்றும் பதிவு செய்ய தேவையில்லை. நுழைவு இலவசம்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் தி சிக்கன் ரைஸ் ஷாப், ராம்லி பர்கர், மஹ் சிங் ஹெல்த்கேர், ஸ்போர்ட்ஸ் டைரக்ட், 99 ஸ்பீட்மார்ட் மற்றும் சாத்தே காஜாங் ஹாஜி சாமுரி ஆகியவை அடங்கும்.


Pengarang :