SELANGOR

சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் நோயாளிகளுக்கு 100 உணவுக் கூடைகள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஜன 31: கிள்ளான்  தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் (HTAR) சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் நோயாளிகளுக்கு மொத்தம் 100 உணவுக் கூடைகள் வழங்கப்படும்.

இந்த நன்கொடையானது அவர்களின் சுமையைக் குறைக்கவும், மன உற்சாகத்தை அதிகரிக்கவும் ஆகும். இதனால் அவர்கள் விரைவாக குணமடைவார்கள்  என எதிர்பார்ப்பதாக பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினர் லியோங் டக் சீ கூறினார்.

“இந்த உணவுக் கூடை உதவியை வழங்குமாறு மருத்துவமனையின் பார்வையாளர் குழுவின் உறுப்பினரிடமிருந்து கோரிக்கையைப் பெற்றோம். மேலும் நோயாளிகளுக்கு உதவ தயாராக இருக்கும் நபர்களின் தனிப்பட்ட பங்களிப்பிற்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

“இந்த சிறிய உதவியின் மூலம், நோயாளியை உற்சாகப்படுத்தவும், குடும்ப உறுப்பினர்களின் சுமையைக் குறைக்கவும் முடியும் என்று நம்பப்படுகிறது,” என அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

கம்போங் பாரு பண்டமாரானில் உள்ள 10 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுக் கூடைகளை வழங்கி சீனப் புத்தாண்டு நன்கொடை தொடர்ந்ததாக டக் சீ மேலும் கூறினார்.

“நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் கிராமத் தலைவர்கள் மற்றும் சிலாங்கூர் பெண்கள் நலன் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் (பெகாவானிஸ்) இணைந்து இந்த நன்கொடையை வழங்குகிறோம்.

“உணவு கூடைகள் மட்டுமின்றி, சீன புத்தாண்டுக்குத் தயாராகும் வகையில் பணம் மற்றும் வீட்டு அலங்கார பொருட்களையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.

கடந்த ஜனவரி 28ஆம் தேதி புக்கிட் திங்கி ஜெயண்ட் சூப்பர் மார்க்கெட்டில் 500 குடும்பங்கள் ஷோப்பிங் வவுச்சர்களைப் பெற்றனர்.


Pengarang :